கம்பி கட்ன கதை: சிரிக்க… சிந்திக்க…

சில வருடங்களுக்கு முன்பு நட்டி நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பிறகு அரவிந்த்சாமி, திரிஷா நடித்த ‘சதுரங்க வேட்டை 2’ படம் தயாராகியும், வெளிவரவே இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக வெளிவந்திருக்கும் படம் இது.

மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழும் நாயகன் நட்டி நட்ராஜ், பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார்.

வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும் நட்டி நட்ராஜ், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார். அந்த வைரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜுக்கு இது பழக்கப்பட்ட கேரக்டர் என்பதால் ஊதி தள்ளிவிடுகிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, காதல், ஆக்ஷன் என படத்தின் எண்டர்டெயின்மெண்டுக்கு உதவி இருக்கிறார். நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் கவர்ச்சி காட்டுகிறார்கள்.

சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் அடங்கிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டணிகாமெடி சிரிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்கள்.
போலி சாமியார்கள் பற்றி துணிச்சலாக பேசி பாராட்டுகளை அள்ளுகிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி.

இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.