மூணு வருஷத்துக்கு முன்னாடி ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயான்னு ஒரு தெலுங்கு படம் வந்துச்சு, காமெடி, த்ரிலிங், ஒரு ஆன்மீக விஷயம்னு கலந்து கட்டி அடிச்சு ஹிட்டான படம்.
இந்த படத்தோட ரீமேக் ரைட்சை வாங்கி வச்சிருந்தவர் வஞ்சகர் உலகம்னு ஒரு படம் இயக்கிய மனோஜ் பீத்தா. இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்பிய சந்தானம் உரிமம் மனோஜ் பீத்தாவிடம் இருக்க சரி நீங்களே இயக்குங்க நான் நடிக்கிறேன்னு நடிச்ச படம்.
உங்க காமெடியெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு ஏஜெண்டு கண்ணாயிரமா வாழுங்கன்னு சொல்லி உருவான படம்.
அம்மாவை பிரிந்து வாழும் மகன் அம்மா செத்துப்போனதும் ஊருக்கு போகிறான். அவன் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட். அம்மா சாவுல சந்தேகம் வருது. ஊருக்குள்ள நிறைய பிணங்கள் கிடக்குது அது என்ன என்று கண்ணாயிரம் கண்டுபிடிக்கிறதுதான் கதை.
மூலப் படத்தை பார்த்தவங்க இந்த படத்தை பார்த்தா தலையில அடிச்சிகிடுவாங்க. அம்புட்டு கொடூரமாக இயக்கி வச்சிருக்காரு மனோஜ பீத்தா. பாவம் சந்தானம்… விளையாட்டு பிள்ளைய கம்புல கட்டி வச்சமாதிரி நடிச்சிருக்காரு.
ரீமேக் ரைட்ஸ் கொடுக்குறவங்க நல்ல இயக்குனரா பார்த்து கொடுக்கிறது நல்லதுங்றதுதான் இந்த படம் சொல்லும் பாடம்.