விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் சிம்பு பாடியுள்ள இந்த பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதி உள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல், தற்போது காப்பி கேட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
தமன் இசையில் ஏற்கெனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான, ரஞ்சிதமே பாடலுக்கும் இதே போல் ஏகப்பட்ட ட்ரோல்கள் வலம் வந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடலும் ஏகப்பட்ட பாடல்களில் இருந்து காப்பியடித்து தான் என நெட்டிசன்கள் பல வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் இடம்பெற்ற மை நேம் இஸ் நானி பாடல், பக்தி பாடல் ஆன வேப்பிலை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பிலை பாடல், ஜிவி பிரகாஷின் ஆல்பம் பாடல், உள்ளிட்ட பல பாடல்களை தீ தளபதி பாடலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களால் ரோல் செய்து வருகிறார்கள்.
இப்படி காப்பிக்கு மேல காப்பி அடிக்காதீங்கப்பு சொந்த யோசிங்க…