அருவா சண்டை பட விழாவுக்கு சரண்யா ஏன் வரவில்லை தெரியுமா?

கபடி வீரர் ராஜா என்பவர் ‘அருவா சண்ட’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஆதிராஜன் என்கிற ஒரு பத்திரிக்கையாளர். இவர் ஏற்கனவே சிலந்தி என்ற படத்தை எடுத்தார். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு இடையில் இயக்கிய படம்தான் அருவா சண்ட இந்த படம் நிறைவடைந்து விட்டாலும் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதில் சரண்யா ராஜாவின் அம்மாவாக நடித்துள்ளார் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது இந்த விழாவுக்கு சரண்யா வரவில்லை.

விழாவில் பேசிய ராஜா “நான் சரண்யாவை கெஞ்சி கூத்தாடி கேட்டும் காலில் விழாத குறையாக கேட்டுட்ம் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை” என்று அழாத குறையாக சொன்னார். இதுவே பெரிய படமாக இருந்தால் போகாமல் இருப்பாரா என்றும் கேட்டார்.

அவரின் இந்த பேச்சு வைரலாக பரவி இருந்தது இது குறித்து சரண்யா தரப்பில் விசாரித்த போது ‘படத்தின் தயாரிப்பாளர் ராஜா மோசடி வழக்கில் சிக்கியவர். அவர் யார் என்று தெரியாமல் சரண்யா படத்தில் நடித்தார். படத்தின் இயக்குனர் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அவர் இந்த படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இந்த படத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்பொழுதுமே சரண்யா தகாத மனிதர்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புவார். அப்படித்தான் இந்த படத்தின் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி அவர் படத்தில் ஒரு கிராமத்து தாயாக வாழ்ந்திருக்கிறார்” என்று கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.