சொத்துக்களை வாங்கி குவிக்கும் நடிகை

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் கோடி கணக்கில் செலவு செய்து, கடற்கரையை ஒட்டிய வீடு ஒன்றை வாங்கிய நிலையில், இதை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் ரெஸ்டாரெண்ட் ஒன்றையும் வாங்கி உள்ளார்.

இது குறித்த அறிவிப்பை அவரே வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சின்ன திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ‘மேயாத மான்’ படத்தை தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான. மாஃயா, கடைக்குட்டி சிங்கம், ஓ மணப்பெண்ணே, கசடதபற, ஹாஸ்டல், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே, தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வங்கியில் கடைசியாக தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த, ‘யானை’ போன்ற படங்கள் ஹிட் லிஸ்டில் இவரை இணைத்தது.

பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக பத்து தல, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், ராகவா லாரன்ஸ் ஜோடியாக ருத்ரன், அருள்நிதிக்கு ஜோடியாக டிமான்டி காலனி ,போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகள் குவிந்து வருவதாலும், பணம் கொட்டோகொட்டுனு கொட்டுவதாலும், ஆசை பட்டத்தை எல்லாம் நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர், பீச் ஹவுஸ் வாங்கியதை, காதலருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்த ப்ரியா பவானி ஷங்கர், இதை தொடர்ந்து,ரெஸ்டாரெண்ட் ஒன்றை துவங்க உள்ளதாக வீடியோ மூலம் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
==========================

Leave A Reply

Your email address will not be published.