இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பு போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியுள்ளது இந்த இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்று கையெழுத்து பெற்றனர். விஜய் சேதுபதி தான் தினமும் குடிப்பதாகவும் அந்த பழக்கத்தை படிப்படியாக குறைத்து வருவதாகவும் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது