ஒரு காலத்துல தீபாவளி பண்டிகைன்னா அதுல 50 சதவித கொண்டாட்டங்ற தீபாளிக்கு ரிலீசாகுற படங்கள். காலங்காத்தால எழுந்திருச்சி, குளிச்சி, புத்தாடை அணிஞ்சு ரசிகமாக ஜனங்க போறது தியேட்டருக்குத்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள், ரஜினி கமல் படங்கள், விஜய் அஜீத் படங்கள் மோதுனா அது டபுள் தீபாவளியா இருக்கும்.ஆனா இன்னிக்கு அந்த நிலைமை மாறிடுச்சி. விஜய் நடிச்ச லியோ படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகி வந்த வேகத்துல போகவும் செய்திடுச்சி. இன்னும் ஒன்னு ரெண்ட பேரை வச்சிக்கிட்டு ஓட்டடிக்கிட்டிருக்காங்க. 600 கோடி வசூல்னு கதை விட்டுகிட்டும் இருக்காங்க. சரி அத விடுங்க தீபாளிகுக் ரிலீசாகியிருக்கிற படத்தை பற்றி பார்க்கலாம்
கார்த்தி நடிச்ச ஜப்பான், ராகவால லாரன்ஸ் எஸ்ஜே சூர்யா நடிச்ச ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபு நடிச்ச ரெய்ட் ரிலீசாயிருக்கு இவை யெல்லாமே வெடிக்காத நமத்து போன பட்டாசத்தான் இருக்கு. இதுங்களுக்கு இடையில் கிடா கெத்து காட்டுது.
ஜப்பான் பட கதை என்னென்னு பார்த்தீங்கன் ஜப்பான் என்கிற கார்த்தி கொள்ளை அடிச்சு சம்பாதிச்சு அதுல சினிமா எடுத்து நடிக்கிறார்.- ஒரு நகை கடை கொள்ளை வழக்குல போலீசு அவரை அமுக்க திட்டம்போடுது. அந்த கொள்ளைய நான் அடிக்கல என் பெயரை சொல்லி யாரோ அடிக்கிறாங்கன்னு சொல்லுறாரு. அப்படின்னா அந்த கொள்ளைய அடிச்சவருயாரு. ஜப்பான் என்ன ஆனாருங்றதுதான் படத்தோட கதை.
ஜோக்கர், குக்கூ , மாதிரியான படங்களை கொடுத்த ராஜு முருக்தான் இப்படிய ஒரு கதையோட படத்த கொடுத்திருக்காறரு. எவ்வளவு பெரிய டைரக்டராக இருந்தாலும் பெரிய ஹீரோக்களுக்காக காம்ப்ரமைஸ் பண்ணும்போது இப்படித்தான் உருப்படாத படம் வரும். பாவம் கார்த்தி 25வது படங்கறதால ரொம்ப மெனக்கெட்டுருக்காரு, நிறை உழைச்சிருக்காரு ஆனா அதெல்லாம் விழலுக்கு இறைந்த நீராப்போச்சு, ராஜு முருகன் ஹீரோக்கள் பின்னால போற விட்டுட்டு ஜோக்கர் மாதிரி நல்ல படம் கொடுங்க. கார்த்தி கமர்ஷியல் படம் பண்ணினா அதுக்கான இயக்குனருகிட்ட போங்க. இதுதான் நம்மோட் அட்வைஸ்.
அடுத்து ஜிகிர்தாண் டபுள் எக்ஸ். இது -ஏற்கெனவே வெளிவந்து ஹிட்டான ஜிகர்தண்டா படத்தோட 2ம் பாகம். முதல் பாகத்துல இயக்குனர் சித்தார்த்தும், தாதா பாபி சிம்ஹாவும் மோதுற கதை. இதுல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும், தாதா ராகவா லாரன்சும் மோதிக்கிறாங்க. செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ராகவா லாரன்சை தீர்த்துக்கட்டும் அசைன்மெண்ட் கொடுக்கிறாங்க. செஞ்சு முடிச்சா விடுதலை போலீஸ் வேலை அப்படீங்கறது டீல். சினிமா ஆசையில இருக்கும ராகவா லாரன்சுகிட்ட ஒரு இயக்குனரா போய் சேருறாரு எஸ்.ஜே.சூர்யா அப்புறம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத கதகள ஆட்டத்தோட முடிவுல எஸ்.ஜே.சூர்யா தாதா ஆகுறாரு, ராகவா லாரன்ஸ் தியாகி ஆகுறாரு.
ஏகப்பட்ட பணம் செலவழித்து கடுமையா உழைச்சு கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத ஒரு படத்த கொடுத்திருக்காரு கார்த்திக் சுப்புராஜ். கடைசி 30 நிமிட படத்தை ரசிக்கிறதுகு இரண்டு மணி நேர தலைவலியை பொருத்துக்க வேண்டியதாக இருக்கு.
அடுத்து ரெய்டு. சிவராஜ்குமார் நடித்து வெளிவந்த கன்னட படமான டகரு படத்தோட ரீமேக்தான் ரெய்டு. வழக்கமான தாதா போலீஸ் அதிகாரி மோதல்தான் கதை இடையில காதல் செண்டிமென்ட் அது இதுன்னு வழக்கமான உப்புமாவ கிண்டுறாங்க. நகரு படத்தை அப்படியே காப்பி அடிச்சி எடுத்திருக்கலாம். அதை விட்டுட்டு புதுசா பண்றோம்ம்னு சொல்லி ஓரிஜனல் படத்தோட பெயரையும் கெடுத்துருக்காங்க. பாவம் ஸ்ரீதிய்யா 6 வருஷத்துக்கு அப்புறம் நடிக்க வந்த புள்ளைக்கு அரை மணி நேரம்தான் கொடுத்திருக்காங்க.
இந்த நமத்துபோன பட்டாசுகளுக்கு மத்தியில கிடா கெத்து காட்டி போயிட்டிருக்கு.