இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரம விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் பரமனாக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார்.மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ படத்தை இயக்கிய சபரிஸ் இயக்கி உள்ளார். அந்த படத்தில் கால் செண்டர் முறைகேடுகளை சொன்னவர் இந்த
படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது.
==========