அதே அழகு, அதே தெனாவெட்டு: 2ம் பாகத்திலும் மிரட்டும் ஸ்ரீவள்ளி

பட்டைய கிளப்பிய ‘புஷ்பா’ படத்தின் அடுத்த பாகம்
‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தி

ல், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிகிறது.

‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்கிறார்.
=================

Leave A Reply

Your email address will not be published.