பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் வித்தியாசமான படங்களைப் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழா, நடைபெற்றது.
முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன், கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார். அருண் விஜய்க்கு இது 36வது படம். இதில் அருண் விஜய் ஜோடியாக சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சாம் சிஷி இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.