விமர்சனம்: ‘ஒயிட் ரோஸ்’, ரெட்ரோஸ் ஆன கதை

படத்தின் தலைப்புதான் ஒயிட் ரோஸ், ஆனால் கதை என்னவோ ரெட்ரோஸ்தான். தவறான என்கவுண்டரில் ஆனந்தியின் கணவன் கொல்லபடுகிறார், வீட்டுக்காரன் வாடகை கேட்டு டார்ச்சர் பண்ணுகிறான். கடன் கொடுத்தவன் மகளை கடத்திச் செல்கிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பக்கத்து வீட்டுக்காரியின் ஆலோசனைப்படி கார்ல் கேர்ளாக முடிவெடுக்கிறார் ஆனந்தி. அவரது முதல் கஸ்டமரே பெண்களை கடத்தி கொன்று அதன்பிறகு பாலியல் வன்புணர்வு கொள்ளும் சைக்கோ ஆர்.கே.சுரேஷ். அவரிடமிருந்து ஆனந்தி எப்படி தப்பிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் சைக்கோ ஆனது எப்படி என்பதுதான் படத்தின் கதை.

முதலில் ஆனந்தியை பாராட்ட வேண்டும். துணிச்சலாக பாலியல் தொழிலுக்கு செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறார். சைக்கோவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிற தவிப்பில் பரிதாப்பட வை’க்றார். ஆர்.கே.சுரேஷ் சைக்கோவாக மிரட்டி இருக்க வேண்டும். ஆனால் கண்ணை விரித்து பார்த்தாலே போதும் என்பது போல நடித்திருக்கிறார். மற்றபடி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

படம் திக் திக் என நகர்ந்தாலும் கதையில் லாஜிக் இல்லை. கணவன் தவறாக கொல்லப்பட்டதை எதிர்த்து ஆனந்தி ஏன் நீதிமன்றம் செல்லவில்லை. ஆர்.கே.சுரேஷை பிடிக்கும் போலீஸ் அவர் கொடூரமான கொலையாளி என்று தெரிந்தும் மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவரை வைப்பது ஏன்? ஆர்.கே.சுரேஷின் கதை தெரிந்த டாக்டரையே அவருக்கு சிகிச்சை அளிக்க நியமிப்பது ஏன் என்பது மாதிரி நிறைய ஏன்கள் இருக்கிறது. என்றாலும் இரண்டு மணி நேரம் திக் திக்கென கடக்க வைத்திருப்பதில் ஒயிட் ரோஸ் பரவாயில்லை ரகம்.

Leave A Reply

Your email address will not be published.