மெரீனா கடற்கரைக்கு ‘திராவிட கடற்கரை’ என பெயர் மாற்றம்: முதல்வருக்கு இயக்குனர் கோரிக்கை

 

சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களாக போராடி வந்தவர் குகன் சக்ரவர்த்தியார். தற்போது அவர் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு, இசை , ஒளிப்பதிவு, பாடல், நடனம், ஸ்டண்ட்
உள்பட 21 பொறுப்புகளை ஏற்று உருவாக்கி உள்ள படம் ‘வங்காள விரிகுடா’. இதில் நாயகிகளாக ஜெயஸ்ரீ, பிரபாத், அலினாஷேக் ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்ட மே லும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில் குகன் சக்ரவர்த்தியார் பேசியதாவது:

சினிமா மீதுள்ள காதலால் 21 துறைகளை நானே ஏற்று இந்த படத்தை முடித்துள்ளேன். அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் இந்த 5 பேரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காகத்தான் இந்த படத்தை உருவாக்கினேன். அப்பதுல் கலாமின் ‘கனவு காணுங்கள்’ என்ற திருவாசகம்தான் படம் சொல்லும் செய்தி. என்னை போன்று வாழாதீர்கள் இந்த தலைவர்கள் போல் வாழுங்கள் என்று சொல்லும் படம்.

நான் விரும்பும் தலைவர்கள் எனக்கு பிடித்த திராவிட தலைவர்கள் மெரீனா கடற்கரையில் உறங்குகிறார்கள். எனவே ‘மெரினா கடற்கரை’ என்ற பெயரை மாற்றி திராவிட கடற்கரை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்

தூத்துக்குடியை பின்புலமாக வைத்து தயாராகி உள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கடலோர பகுதிகளில் நடந்துள்ளது. சென்னையில் வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடங்களில் உரிய
அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.