அரசியல் தலைவர் சினிமா தயாரிப்பாளர்: ஆர்.எம். வீரப்பன் காலமானார்

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன்(வயது 97) இன்று (ஏப். 9, காலமானார்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆர்.எம். வீரப்பன். மக்கள் திலகம் எம்ஜிஆரின் மேலாளராகவும் அந்தரங்க உதவியாளராகவும் இருந்தவர். தமது சத்யா மூவிஸ் மூலமாக ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த ஆர்.எம். வீரப்பன், மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். 

ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் நாளை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.