சிறுகதை எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் ‘எவ்வம்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து சிவகணேஷ் இயக்கி வருகிறார். இவர் தமிழில் சிங்கபெண்ணே, போலீஸ் டைரி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர். இது மட்டுமில்லாமல் கன்னடத்தில் 8 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கிச்சா சுதீப் தயாரித்த ஜிகர்தண்டா, ரவிச்சந்திரன் நடித்த ஆ திருஷ்யா திரைப்படத்தையும் இயக்கியவர் .
ஏ.ஆர்.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சிற்பி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிரான்ட் மாஸ்டர் சரபேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் முத்துக்குமார், வினோத் சாகர், அரோல் சங்கர், பூமிகா ஷெட்டி, ரோஜா ஸ்ரீ, பாப்ரி கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.