‘சபரி’ விமர்சனம்: பெறாத பிள்ளைக்காக போராடும் தாய்

வரலட்சுமி சித்தி கொடுமையில் வளர்ந்தவர். இதனால் அவருக்கு அன்பான கணவராக கணேஷ் வெங்கட்ராமன் கிடைக்கிறார். ஒரு நாள் கணவனின் தவறான நடத்தையை கண்ணால் பார்க்கும் அவர் கணவரிடமிருந்து பிரிந்து தன் மகளுடன் தனித்து வாழ்கிறார். கஷ்டப்பட்டு வேலை செய்து மகளை படிக்க வைக்கிறார்.

மனநல காப்பகத்திலிருந்து தப்பிக்கும் மைம் கோபி, வரலட்சுமியின் மகளை கடத்த துரத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் மகள் தனக்கு பிறந்தவள் அல்ல என்பதை வரலட்சுமி அறிகிறார். அப்படியென்றால் மகள் யார்? மகளை கடத்த மைம்கோபி திட்டமிடுவது ஏன்?, கணவர் கணேஷ் வெங்கட்ராம் மனைவியை பழிவாங்க துடிப்பது ஏன்? என்பது படத்தின் மீதி கதை.

தனியொருத்தியாக படத்தை தாங்கி பிடிக்கிறார் வரலட்சுமி, 4 வயது மகளுக்கு தாயாக அற்புதமாக நடித்திருக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் வழக்கம்போல ரிச் வில்லனாக நடித்திருக்கிறார். மைம்கோபி நன்றாக நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் தெளிவாக எழுதப்படவில்லை. கணேஷ் வெங்கட்ராமன் குழந்தையை மாற்றியதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை.

அவ்வப்போது வரும் திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யப்படுத்தினாலும் திரைக்கதை அங்கும் இங்கும் அலைபாய்வதால் சரியாக ரசிக்க முடியாமல் போகிறது. இயக்குனர் அனில் காட்ஸ் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் கவனிக்க வைத்திருக்கும். என்றாலும் வரலட்சுமியின் நடிப்பிற்காக படம் பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.