80களில் கொடிகட்டி பறந்த நடிகர்மோகன். வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்டவர்.. சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடித்துள்ள படம் ‘ஹரா’.
கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ராம் (மோகன்). திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே, குடும்பம் நிலைகுலைகிறது. இதன்பிறகு இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்குகிறார்.
மகளின் மரணத்துக்கான காரணத்தை தேடும்போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது அதேபோல ஆபத்துகளும் வருகிறது. அது என்ன அதை அவர் கடந்து சென்றாரா? மகளை கண்டுபிடித்தாரா? என்பது மீதி கதை..
படத்தை தனி நபராக தாங்கி பிடிக்கிறார் மோகன். எந்தவித அலட்டலும் இல்லாமல் நிதானமான நடித்திருக்கிறார். குறிப்பாக எமோல்சன் காட்சிகளில் அழ வைத்து விடுகிறார். அனுமோல். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். மற்ற கேரக்டர்களுக்கு பெரிய முக்கியத்தும் இல்லை.
பழிவாங்கும் கதையில் தீவிரவாதம், மத நல்லிணக்கம், மருந்துகளில் கலப்படம் என சமூக அக்கறையுடன் சில விஷயங்களை சொல்கிறது படம். மோகன் கடினமாக உழைத்து, நடித்திருந்தாலும் அவருக்கு இது சரியான கம்பேக் படமாக அமையவில்லை.