‘பேட் பாய்ஸ்’ படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் வில் ஸ்மீத், மார்டின் கூட்டணியில் 4வது பாகமாக வெளிவந்துள்ளது ‘பேட் பாய்ஸ்: ரைட் ஆர் டை’ படம்.
படத்தின் கதை இதுதான் வில் ஸ்மீத் தன் பல வருட தவம் முடிந்து ஒரு வழியாக ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார், அந்த திருமண நிகழ்ச்சியிலேயே அவரின் நண்பர் மார்டின் மாராடைப்பு ஏற்பட்டு கீழே விழுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து எல்லாம் சரி ஆகி வெளிவரும் போது, பேட் பாய்ஸ் டீமின் தலைமை அதிகாரி கடந்த பாகத்தில் இறந்திருப்பார், அவர் போதை கும்பலோடு தொடர்புடையவர் என அரசாங்கமே சொல்கிறது. இதனால் கோபமான பேட் பாய்ஸ் குழு தன் தலைவர் மீது விழுந்த பழியை துடைக்க களத்தில் இறங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
படம் முழுவதும் செம ஸ்மார்ட் ஆக அதிரடி ஆக்ஷனில் பட்டையை கிளப்புகிறார் வில் ஸ்மித்..அவரது நண்பர் மார்டினும் வழக்கம் போல் டைமிங் காமெடியில் கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக பேமிலி செண்டிமெண்ட்டும் உள்ளது. வில் ஸ்மீத் மகன் மீண்டும் இதில் வர அவருடன் மன்னிப்பு கேட்பது, தன் மனைவியை வில்லன் கடத்தி வைக்க அவரை காப்பாற்ற போராடுவது என நிறைய செண்டிமெண்ட் இருக்கிறது.
ஆரம்பத்தில் சில மணி நேரம் பொறுமையை சோதிப்பது போல் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள். பின்னர்தான் படம் சூடுபிடிக்கிறது. வில்லன் கதாபாத்திரமும் பெரியளவில் ஈர்க்கவில்லை, குடும்பத்தை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டும் வழக்கமான வில்லன்