ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் டி. பாலசுப்பிரமணி, சி.சதீஷ் குமார்
தயாரிக்கும் படம் ‘பிதா’. கார்த்திக் குமார் இயக்குகிறார். ராமராஜன் நடித்த ‘சாமான்யன்’ படத்தை இயக்கிய வி.மதி இந்தபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். வனிதா விஜய்குமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சரவணன் சுப்பையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார், பிராங்க்ளின் ரிச்சர்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளரும், ஹீரோவுமான வி.மதி பேசியதாவது: இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை. இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன். உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். என்றார்.
இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது:
எனது தயாரிப்பாளர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில் நான் நிற்க காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர்.
மதியழகன் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறைதான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார். தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம். என்றார்.
===============