சூர்யா விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது: அனல் அரசு

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பீனிக்ஸ்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பீனிக்ஸ் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சூர்யா விஜய்சேதுபதி பேசியதாவது: இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டினர். அனல் அரசு அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால் இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். தயாரிப்பாளர் இந்த படம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்தார். படத்தில் நடித்த அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்றார்.

இயக்குனர் அனல் அரசு அவர்கள் பேசும்போது, “நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குனராக முடிவு செய்தேன். இந்தப் படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நான் சாவின் விளிம்பு வரை சென்று பணியாற்றி உள்ளேன். 32 வருடமாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். இன்று ஒரு படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.

இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். அது ஒட்டுமொத்த சினிமாவிற்கும் நல்லது. இதை ஒரு சூர்யா விஜய் சேதுபதி படமாக மட்டும் பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள். இந்த கதை சூர்யாவிற்கு எழுதியது இல்லை. ஆனால் சூர்யா இந்த படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார்.
அவருடைய கடின உழைப்பை கூடவே இருந்து பார்த்து உள்ளேன். இந்த வயதில் அதிக உழைப்பை கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. என்றார்.

Leave A Reply

Your email address will not be published.