வனிதா விஜயகுமார் இயக்கி நாயகியாக நடித்துள்ள படம். அவரது ஜோடியாக அவரது நண்பர் நடன இயக்குனர் ராபர்ட் நடித்துள்ளார். இப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
படத்தின் கதையை பார்க்கலாம். ஷகீலாவின் மகளான வனிதா, சமையல்கலை நிபுணரான ராபர்ட்டை துபாயில் சந்தித்து காதல் கொண்டு திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் இருவரும் தாய்லாந்தில் வாழ்கிறார்கள். முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத வனிதா 40 வயதில் தனக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் கணவர் ராபர்ட் வேண்டவே வேண்டாம் என மறுக்கிறார். இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். ராபர்ட் ஏன் தனக்கு குழந்தை வேண்டாம் என்கிறார். வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் அடல்ட் கண்டெண்டாக இருந்தாலும் துணிச்சலான சில விஷயங்களை பேசி இருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்வதற்க வயது ஒரு தடையல்ல என்பதே அந்த மெசேஜ். பெண்களின் உளவியலை மிகவும் எதார்த்தமான புரிதலோடு கையாண்டிருக்கிறார் வனிதா.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ஆர்த்தி, கணேஷ், ஷகீலா, கிரண் , ஸ்ரீமன் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர். வனிதா தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிப்படுத்த இந்த படத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ராபர்ட்டின் முரட்டு உருவத்திற்குள் இருக்கும் குழந்தைத்தனம் ரசிக்க வைக்கிறது.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் தரமான படமாக அமைந்திருக்கும்.