கிஸ்: பேண்டசி ரொமான்ஸ்

காதல் என்றாலே கடுப்பாகிறவர், கவின். அவர் கையில் கிடைக்கும் புத்தகம் ஒன்றால் யார் முத்தம் கொடுக்தாலும் அவர்களின் எதிர்காலத்தை சொல்லிவிடும் திறன் வந்து விடுகிறது கவினுக்கு. அந்த புத்தகம் தனக்கு கிடைக்க காரணமான பிரீத்தி அஸ்ராணியை காதலிக்கிறார். கவினின் அபூர்வ சக்தியே அவரது காதலுக்கு எதிராக திரும்ப அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம். காதல், காமெடி இரண்டிலும் கலக்குகிறார் கவின். தன் நடிப்புத் திறனையும், நடனத் திறமையையும் அழகாகப் பதிவு செய்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி. மிர்ச்சி விஜய் – விடிவி கணேஷ் காமெடியில் கலக்குகிறார்கள். தேவயாணி, கௌசல்யா, கவினின் அப்பாவாக ராவ் ரமேஷ், ப்ரீத்தி அஸ்ராணியின் அப்பாவாக கல்யாண், கௌரவத் தோற்றத்தில் பிரபு அனைவரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவில், டிரோன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அருமை. ஆர்.சி.பிரணவ். ஜென் மார்ட்டின் பின்னணி இசைபடத்திற்கு பெரிய பலம். பேண்டசி படம் என்றாலும் முழுக்க அந்த ஏரியாவுக்குள் போகாமல், நாயகனுக்கு இருக்கும் குடும்பப் பிரச்னை, காதல் மீதான அவநம்பிக்கை போன்றவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கிறது படம்.

Leave A Reply

Your email address will not be published.