தமிழ்நாடு, கேரளா எல்லைதான் கதை களம். அந்த பகுதியை செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகிய கந்துவட்டி தாதாக்கள் கூறுபோட்டு ஆள்கிறார்கள். ஒருவரை வீழ்த்தி மற்றவர்கள் அந்த பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இவர்களின் சதி வலைக்குள் சிக்குகிறார்கள் கபடி நண்பர்ளான ஷேன் நிகமும், சாந்தனும் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும்.மூன்று தாதா கும்பல்களுக்கும், இடையில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையிலான மோதில் இவர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள். கடைசியில் கபடி வீரர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் கதை.
நண்பனுக்காகத் துடிக்கும் பாசக்காரராகவும், கபடி ஆட்டத்தில் துணிச்சல்காரராகவும், ஆக்ஷன் களத்தில் சம்பவக்காரராகவும் தன்னுடைய 25வது படத்திற்குப் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ஷேன் நிகம். ரொமான்ஸ், சென்டிமென்ட் களத்திலும் அப்ளாஷ் அள்ளுகிறார்.
நண்பர்கள்தான் உலகம் என்று நிற்பதம், அவசரமாக முடிவெடுப்பதும், பின்பு தடுமாறுவதுமான நடிப்பில் கவனம் பெறுகிறார் சாந்தனு. அவரது கேரியரில் இது முக்கியமான படம். குறைவான காட்சிகள் இருந்தாலும் அதில் ஜாலக்காரியாக ஜொலிக்கிறார், ப்ரீத்தி அஸ்ரானி. பென்சில் மீசை லுக், ஸ்டைலான உடல்மொழி எனக் கவனம் ஈர்க்கிறார், அல்ஃபோன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித்துக்கு அதிக வாய்ப்பில்லை.
கந்து வட்டி வசூல் செய்யும் இருமுகம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார்.
கோவை – கேரளா எல்லைப் பகுதியின் நிலப்பரப்பைப் படம்பிடித்த அலெக்ஸ் ஜே.புலிக்கலின் ஒளிப்பதிவு மேஜிக் . ஜாலக்காரி, பல்டி டைட்டில் பாடல் எனப் பாடல்களில் சாய் அபயங்கர் கெத்தாக களம் இறங்கி உள்ளார்.
கத்தியைத் தொட்டவனின் கதி என்னவாகிறது, அதிலிருந்து விலகியவனின் எதிர்காலம் என்னவாகிறது என்கிற மெசேஜ் சொல்கிறது படம்.