பணக்கார குடும்பத்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் சாக்ஷி அகர்வால், உடன் பணியாற்றும் விஜய் விஷ்வாவை காதலிக்கிறார். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்டிட தொழிலாளி செல்லக்குட்டி சாக்ஷியை கடத்திச் செல்கிறார். அவர் கடத்தியது ஏன்? அவருக்கும், சாக்ஷிக்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
கவர்ச்சி, சென்டிமெண்ட், பயம், ரொமான்ஸ் என்று நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி அவரது கேரியரில் இது முக்கியமான படம். கவர்ச்சியோடு நடிப்பையும் காட்டி இருக்கிறார். அவரது காதலான வரும் விஜய் விஷ்வாவிற்கு அதிக வேலை இல்லை.
வில்லனாக வரும் ஸ்டண்ட் மாஸ்டர் ‘மிரட்டல்’ செல்வா, நடிப்பிலும், சண்டையிலும் மிரட்டி இருக்கிறார். இயக்குனர் செல்லக்குட்டி, ஆரம்பத்தில் காமெடியனாக வந்து பிற்பகுதியில் சீரியசாக நடித்துள்ளார். அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை சிரிக்க வைக்கிறார்கள்.
ஜெ.லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவும், கார்த்திக்ராஜா பின்னணி இசையும் கதைக்கு உதவியுள்ளன. தாய்பாசத்தையும், காதலையும் இணைத்து புதிதாய் ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்லக்குட்டி. ஒன் டைம் வாட்ச் மூவியா வந்திருக்கிறது சாரா.