எனக்கு முதன் முதலில் முழு சம்பளம் கொடுத்தவர் தயாரிப்பாளர் எம்.எஸ்.மூர்த்தி: ரக்சிதா பெருமிதம்

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில், படக்குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் நடிகை ரக்‌ஷிதா பேசியதாவது:
உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. எல்லோரும் என் ரசிகர் மன்ற தலைவர் என சொல்லிக்கொள்வது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்கு ஷீட்டிங்கின் போது சின்னப்படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. மூர்த்தி சார் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொள்வார். புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விசயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். பட ஷீட்டிங் மிக ஜாலியாக இருக்கும். மூர்த்தி சார் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்.

எனது சினிமா பயணத்தில் சம்பள பாக்கி போன்ற பல பிரச்சினைகள் நடந்திருக்கும். சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்கள். எனக்கும் அது நடந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பிலேயே எனது முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்கள். எனக்கு யாருமே இதை செய்யவில்லை. அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

இதில் நான் பேயாக நடித்திருக்கிறேன். ஆனால் நான் நார்மலான பொண்ணுதான். அவ்வப்போது மட்டும் பேய் பிடிக்கும். கோவம் வருவது போலத்தான் அந்த பேயும் வரும். அது நடிப்பு போல தெரியாது. ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கும், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.