பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய எம். ஆர் .பாரதி இயக்கியிருக்கும் படம்.
கதையின் நாயகன் ஜீவா தனது காதலி ஹரிஷ்மிதாவை ரயில் இவற்றில் பறிகொடுக்கிறார். இந்நிலையில், ஒரு படம் இயக்க அவருக்கு ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுக்கிறார். ஹீரோயினுக்கான தேர்வு நடக்கும்போது, ஜீவாவின் இறந்த காதலி நேரில் வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
புதுமுகம் ஜீவா தனது கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். மறைந்த ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின் மகளுமான ஹரிஷ்மிதாவுக்கு அதிக ஸ்கோப் கொண்ட கேரக்டர். சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் வில்லன்கள் என்று யாரும் இல்லை சூழ்நிலைதான் வில்லத்தனம் செய்கிறது. உண்மையான காதலில் ஒரு புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாரதி. சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு, இளமாறன் வசனம், உதவி இருக்கிறது.
மற்ற கேரக்டர்களில் நடித்துள்ள பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோர் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
‘காதலர்கள் தோற்கலாம், காதல் தோற்காது’ என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் பாரதி.