முன்னணி தயாரிப்பு நிறுவனமான லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘4 இடியட்ஸ்’.
அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார். நாயகியாக பிரக்யா நயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின், இந்திரன், திடியன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சுபாஷ் முனிரத்னம் இசையமைத்திருக்கிறார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதி செய்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.