பெத்தி: அடையாளத்தை அடைய போராடும் மாவீரன்

தன் மக்களின் அடையாளத்திற்கும், அங்கீகரத்திற்கும் விளையாட்டை ஆயுதமாக கொண்டு போராடிய மாவீரனே ‘பெத்தி’. விஜயநகரம் மலைப் பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ‘பெத்தி’ (ராம் சரண்) மிகவும் பிரபலமானவர். எந்த விளையாட்டு என்றாலும், அங்கு பெத்தியின் பெயர்தான் ஒலிக்கும். ஆனால் அவர் கூலிக்கு விளையாடுகிறவர்.

கிரிக்கெட்டில் பெரும் புலியாக இருக்கிறார். ஆனாலும் அவரது மக்களும், ஊரும் ஒரே ஒரு ரெயில் நிறுத்த்திற்காக போராடுகிறார்கள். ஊருக்கு பேரும், வசிப்போருக்கும் அடையாளமும் இல்லாததால் அது மறுக்கப்படுகிறது. விழித்து எழும் பெத்தி குஸ்தி கற்று அதில் தேசிய அளவில் வென்று தன் மக்களுக்கு அடையாளத்தை பெற்றுத்தர போராடுகிறார். இந்த போராட்டத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், சாதனைகளுமே படம்.

பெத்தி கதாபாத்திரமாகவே ராம் சரண் வாழ்ந்திருக்கிறார். எங்குமே ராம் சரண் தெரியவில்லை, பெத்திதான் தெரிகிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு இது அவருடைய மற்றொரு சிறந்த நடிப்பு. மல்யுத்தக் காட்சிகள், கிரிக்கெட் காட்சிகள், உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்திலும் அசத்தியுள்ளார். இது ஒரு விருதுக்கான நடிப்பு என்று சொல்லலாம். அப்பிராஜுவாக ஜெகபதி பாபுவுக்கு மற்றுமொரு சிறந்த கதாபாத்திரம். குறைந்த நேரமே வந்தாலும், ராம் சரணை டாமினேட் செய்யும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் உள்ளது. ஜான்வி கபூர் கிளாமராக வருகிறார், கௌர்நாயுடுவாக சிவராஜ்குமார் பவர்ஃபுல் ரோலில் மிரட்டியுள்ளார். ஸ்ருதி ஹாசன் ஒரு சிறப்பு பாடலுக்கு ஆடியுள்ளார்.

படத்திற்கு ரகுமானின் இசை பெரிய பலம், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அருமை. அந்தக் காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார். இயக்குனர் புச்சி பாபு சனா ஒரு நல்ல கதையை எழுதி, அதை இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகக் கொண்டு தந்துள்ளார். அருமையான கதை, ராம்சரனின் அதீத உழைப்பு, நடிப்பு இவற்றுக்காகவே பெத்தி நிமிர்ந்து நிற்கிறார்.தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.