ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம்

ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது.

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

உதய் சங்கர் ( ஸ்டார் & டிஸ்னி இந்தியா சேர்மன் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் முதன்மையான படமாக இருக்கும் என்று கூறினார்.

HT Leadership Summit 2020 ல்
திரு சங்கர் அவர்கள் CNBC TV 18 உடைய அனுராதா செங்குப்தாவுடன் உரையாடியபோது…

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறினார். படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று பரவும் வதந்திகள் குறித்து கேட்டபோது, உங்களிடம் ஒன்றை சொல்கிறேன் இப்படம் அதனையும் தாண்டிய பெரிய பட்ஜெட் படம் என்றார். மேலும் அவர் கூறியபோது இந்த வகையில் உருவாகும் பிரமாண்ட படம் எதுவாயினும் அது அனைத்து வகையிலும் ரசிகனுக்கு அந்த பேரனுபவத்தை தரும் சாத்தியங்களை முழுமையாக அடையவேண்டும். அந்த பேரனுபவத்தை தியேட்டரில் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றார்.

தர்மா புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜினா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.