‘லக்கி மேன்’ படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரின் நாயகன் குமரன் தங்கராஜ் நடிக்க பாயல் ராதா கிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்.
நீதிக்காகவும், மக்களுக்காகவும் போராடும் சமூக போராளி ஜி.என்.குமரவேல். அவர் முதியவர் ஜி.எம்.குமார் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஓனரின் மகன் மகள் படிப்பு , கல்யாணம், பேரன் பேத்தி பிறப்பு சம்பவங்கள் எல்லாவற்றிலும் இணைந்து வீட்டு ஓனரின் குடும்பத்தில் ஒருவராகிறார்.
ஒரு நாள் அவர் திடீரென வீட்டில் இறந்து கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறது போலீஸ். அவரை கொலை செய்தது யார், அவரது எதிரிகள் யார் என்ற போலீஸ் விசாரணையில் ஒட்டு மொத்த குடும்பமும் குற்றவாளி கூண்டில் நிற்கிறது. உண்மையில் கொலை செய்தது யார் என்பதுதான் படம்.
சமஸ்கிருதத்தில் காளிதாசன் எழுதிய ஒரு காப்பியத்தின் பெயர் ‘குமார சம்பவம்’. அதே கதையை வைத்து மலையாளத்தில் ஒரு படம்கூட வந்தது . இப்போ து தமிழில்.
தனி மனிதனுக்கு சமூக அக்கறை வேண்டும் . பணத்தை விட அன்பு முக்கியம், உண்மை அன்பை வார்த்தையால் இனிக்க இனிக்க காட்ட வேண்டியது இல்லை செயலால் காட்ட வேண்டும் . நேர்மையாக வாழ வேண்டும். என்பதை சொல்கிறது படம்.
இசை அமைப்பாளர் அச்சு ராஜாமணியின் பின்னணி இசையும், ஜெக்தீஷ் ஒளிப்பதிவும் ஒகே ரகம். படம் நாடகத்தன்மையோடு இருந்தாலும் இரண்டரை மணி நேரம் போராடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க காமெடி சம்பவங்கள்தான் என்றாலும் தரமான சம்பவங்கள்.