சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, ‘ வித் லவ்’ படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.