‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற முஸ்தபா முஸ்தபா பாடல் இன்றைக்கும் நட்பை போற்றும் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தலைப்பாக கொண்ட இந்த படமும் நட்பை பற்றி பேசுகிறது. ஆனால் கொஞ்சம் கசமுசா விஷயங்களுக்கு அந்த நட்பு பயன்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் சதீஷ் நடித்த ஒரு கில்மா படத்தின் டீசர் வெளியாக காதல் பிரேக்அப் ஆகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமாதிரியான ரொமாண்டிக் காதல் படம். சதீஷுக்கு இந்த மாதிரியான கேரக்டர் புதிதில்லை என்பதால் எளிதாக நடித்துவிட்டுப்போகிறார். ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார். இரண்டாவது நாயகன் சுரேஷ் முன்னணி நாயகன் போன்று படம் முழுக்க தனது ஆதிக்கத்தை செலுத்துகிறார். நாயகி மோனிகாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அழகால் ஆட்கொள்கிறார். லாரா தத்தா கிளாமர் காட்டுகிறார்.
வழக்கமான ரொமாண்டிக் காதல் படம்தான் ஆனால் அதன் திரைக்கதையும், குறிப்பாக கிளைமாக்ஸ் ஆச்சர்யப்பட வைக்கிறது. இரண்டே கால் மணி நேரத்தை உற்சாகமாக களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு படம் செம விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் சரவணன். முஸ்தபாக்கள் ஏமாற்றவில்லை.