தமிழ் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவர் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள பிரமாண்ட சரித்திர படம். டெல்லியில் ஆண்ட முகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப், ஹைதராபாத்தை ஆண்ட நவாப்கள் ஆகியோரை எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை.
வீர மல்லு சரித்திர கால ராபின் ஹூட். திருடுவதில் கெட்டிக்காரர், அதாவது இருப்பவர்களிடமிருந்து திருடி, இல்லாதவர்களுக்கு தானம் தர்மம் செய்பவர்.
இவர் நவாப்வுக்கு வரவேண்டிய வைரங்களையெல்லாம் இவர் கொள்ளையடித்து வரும்போது நவாப்பிடமே சிக்கிக் கொள்கிறார். நவாப்போ இவருக்கு தண்டனை கொடுக்காமல் வீர மல்லு திறமை அறிந்து, இவனை வைத்து நாம் இன்னும் சாதிக்கலாமே என கோஹினூர் வைரத்தை திருட கட்டளையிடுகிறார்.
அதுவோ அவுரங்கசீப்பின் சிம்மாசனத்தில் இருக்கிறது. அதேபோல வீரமல்லுவின் குலத்தவர் அவரங்க சீப்பின் அரண்மணையில் பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கோஹினூர் வைரத்தை வீரமல்லு கொள்ளை அடித்தானா, தனது குலத்தவரை காப்பாற்றினாரா என்பது மீதி கதை.
பவன் கல்யான் வீர மல்லுவாக அவரது ரசிகர்களுக்கு செம விருந்து வைத்துள்ளார், சொல்ல போனால் படமே ஒன் மேன் ஷோ தான், முழுப்படத்தையும் பவன் கல்யாணே தாங்கி நிற்கிறார். குஸ்தி சண்டை ஆரம்பித்து கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டையில் கத்தி சண்டை வரை தன்னால் முடிந்த அளவு தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். அவர் இல்லாத காட்சிகளே இல்லை என்கிற அளவிற்க நிறைந்திருக்கிறார்.
நிதி அகர்வால் அழகாக உள்ளார், வெறும் ஹீரோயினாக இல்லாமல் அவருக்கு டுவிஸ்ட் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா. அவுரங்க சீப்பாக பாபி தியோல் கொடூர வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
1600 களில் நடக்கும் என்பதால் பிரமாண்ட செட்டுகள் மிரள வைக்கிறது. பிரமாண்ட காட்சிகள், அதிரடி திருப்பங்கள், அடுத்த பாகத்துக்கான பரபரப்பான லீட் இவற்றால் பாகுபலியின் இடத்தை பிடிக்கிறார் வீரமல்லு.