விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” 31ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இதன் புரமோசன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த நடிகர் விஜய் தேவராகொண்டா படம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும்.
இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.
இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து பிரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே. எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .
சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது. அனிருத்
இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார்.
இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம். விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது. என்றார்.