இந்திரா: திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து

ஒரு சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி வசந்த் ரவி சில காரணங்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால் அளவிற்கு அதிகமாக மது அருந்தும் அவருக்கு பார்வை பறிபோகிறது. இந்த நிலையில் அவரது மனைவி மெஹ்ரின் பிர்சோடா வீட்டிற்குள் கொல்லப்பட்டு கிடக்கிறார்.

வசந்த் ரவிக்கு கண்பார்வை எப்படி பறிபோனது, மனைவியை யார் கொன்றது என்பதற்கு விடை சொல்கிறது. இந்த பரபரப்பான திரைக்கதை. எழுதி இயக்கி, மேக்கிங்கில் அசத்தியுள்ளார் சபரிஷ் நந்தா. வசந்த் ரவிக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர். நடிப்பிலும் குறைவைக்காமல் நடித்திருக்கிறார்.

மனைவி மீது பாசத்தை பொழிந்து, அவரது திடீர் இழப்பை தாங்க முடியாமல் தவித்து, கொலையாளியை தேடி ஆவேசத்துடன் பயணித்து, பார்வை பறிபோன நிலையிலும் தனது வித்தியாசமான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்.

மெஹ்ரின் பிர்சோடா, அனிகா சுரேந்திரன் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சைக்கோ கொலையாளியாக சுனில், கறாரான போலீஸ் அதிகாரியாக டான்ஸ் மாஸ்டர் கல்யாண், வசந்த் ரவிக்கு உதவும் ராஜ்குமார், மலையாள நடிகர் சுமேஷ் மூர் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
கிரைம் திரில்லர் படங்களுக்கு நல்லதொரு விருந்தை பரிமாறியிருக்கிறார் இந்திரா.

Comments (0)
Add Comment