மிராய்: பேண்டசி பிரமாண்டம்

கலிங்க போரில் மாமன்னர் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள தெய்வ சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார். உலகத்திற்கு ஆபத்து ஏற்படும்போது இந்த புத்தகங்களை ஒருங்கிணைத்து தெய்வீக சக்தி பெற்று ஆபத்திலிருந்து உலகை காப்பாற்ற வேண்டும் அஎன்பது அவரது ஆணை.

பல யுகம் கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் வில்ன் மனோஜ் மஞ்சு. இதற்காக பெரும் படையையும் வைத்திருக்கிறார். 9வது சக்திவாய்ந்த புத்தகத்தை வைத்திருக்கும் ஸ்ரேயா வரும் ஆபத்தை உணர்ந்து கர்ப்பத்தில் இருக்கும் மகன்தான் இதை காப்பாற்ற சக்தி உள்ளவன் என்பதை உணர்ந்து தான் யார் என்றே தெரியாமல் மகனை அனாதையாக விட வேண்டும், அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதரீமான மிராயை வில்லனை அழிக்க வேண்டும் சொல்லி உயிர்தியாகம் செய்கிறார்.

தாயின் சபதத்தை மகன் நிறைவேற்றினாரா என்பதே படத்தின் கதை.
முன்பு ‘ஹனுமான்’ தற்போது மிராஜ் என தன் கதை தேர்விலேயே கலக்குகிறார் தேஜா சஜ்ஜா, அவரும் தன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார், கண்டிப்பாக தேஜா திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் படமாக இருக்கும்.

தேஜாவின் சக்தியை அவருக்கு உணர்த்த அவரை தேடி அலைவது, அவருக்கு புரிய வைப்பது, இடையிடையே காதல் கொள்வது என ரித்திகாவிற்கும் படத்தில் நிறைய வேலை இருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் மனோஜ் மஞ்சு மிரட்டுகிறார்.

இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் பல மாநிலங்கள் பயணப்படும் கதையில் மிக அழகாக காட்சிபடுத்தியுள்ளார். லாஜிக்கையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தால் மாஸ் எண்டர்டயின்மென்ட் படமாய் மிரட்டுகிறது மிரல்.

Comments (0)
Add Comment