படையாண்ட மாவீரா: கமர்ஷியல் களத்தில் களமாடிய வீரனின் கதை

முந்திரிகாட்டுப் பகுதியில் சக்தி மிக்க மனிதராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒருங்கிணைத்து உருவாகி உள்ள படம். வ.கவுதமன் இயக்கி, குருவாகவும் நடித்துள்ளார்.

அவரது வாழ்க்கையில் நடந்தது என்ன? எப்படி மாவீரராக அப்பகுதி மக்களால் அவர் கொண்டாடப்படுகிறார் என்பது கதை. படம் முழுவதும் காடுவெட்டி குரு கேரக்டராகவே மாறியிருக்கும் வ.கவுதமன், நடிப்பில் விஜயகாந்த் சாயல் தெரிகிறது. சண்டையில் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இளம் வயது குருவாக நடித்துள்ள தமிழ் கவுதமனும் நம்பிக்கை வரவாக இருக்கிறார்.

குரு மனைவியாக வரும் பூஜிதா பொன்னாடா பொருத்தமான தேர்வு. அழகாகவும் இருக்கிறார். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன ராவ், சாய் தீனா, தமிழ் கவுதமன் உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரனின் கேமரா, கலர்புல் காக்டெய்ல். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்களில் பழைய வாசனை அடித்தாலும் கேட்க இனிமையாக இருக்கிறது. சாம் சி.எஸ்சின் பின்னணி இசை ஆர்ப்பாட்டமாக இருக்கிறது.

உண்மை சம்பவத்தை சினிமாவுக்கு ஏற்ப கற்பனை சம்பவங்கள் கலந்து பக்கா கமர்ஷியல் படமாக தந்திருக்கிறார் கவுதமன்.

Comments (0)
Add Comment