டீசல்: சொல்லப்படாத கதை

1979ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களின் பின்னணயில் உருவாகி உள்ள படம்.
இந்த குழாய்களில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதா மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அரசின் அடக்குமுறையால் போராட்டம் நசுக்கப்படுகிறது. அதனால் அந்த குழாயையே தங்கள் வாழ்வாதாரமாக மாற்றி கொள்கிறது ஒரு கூட்டம்.

சாய் குமார் அந்த குழாயின் நடுவே துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி டீசல் மாஃபியாவை உருவாக்குகிறார். அதன் வருமானத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்கு கொடுக்கிறார். போராட்டத்தில் தன் பெற்றோரை இழந்த ஹரிஷ் கல்யாணை மகனாகவும் வளர்க்கிறார்.

கெமிக்கல் இன்ஜினியரான ஹரிஷ் கல்யாண், வளர்ப்பு தந்தையின் டீசல் மாஃபியாவை தொடர்கிறார். ஆனால், இவர்களுக்குப் போட்டியாக விவேக் பிரசன்னா வருகிறார். அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரி வினய் ராயும் வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

ஹரிஷ் கல்யாண் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். சண்டை காட்சியிலும், காதல் காட்சியிலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார். வளர்ப்புத் தந்தையாக சாய் குமார், எமோஷனல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். வில்லனாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் குறையேதுமில்லை. வினய் ராயின் வில்லத்தனம் மிரட்டுகிறது.

நாயகிகளாக அதுல்யா ரவி, அனன்யா தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

திபு நினன் தாமஸின் இசையில் ‘எம்மாடி … எம்மாடி’ பாடல் ஏற்கெனவே ஹிட். பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்க முயல்கிறது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு கூட்டணி காட்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

ராட்சச குழாய்கள், குடிசைக்கு நடுவே குரூட் ஆயில் எடுக்கும் லேப், கேன், குடிசைகள் எனக் கலை இயக்கமும் மிரட்டல் ரகம். முதலாளித்துவத்தின் சுரண்டல், பூர்வகுடி மீனவர்கள் வெளியேற்றம், நில அபகரிப்பு, குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதம் அரசியலோடு உருவாகும் டீசல் மாஃபியா’ உலகம் என இதுவரை திரையில் காட்டப்படாத விஷயங்களை காட்சி ஆச்சர்யப்படுத்துகிறது படம்.

Comments (0)
Add Comment