உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ‘டியூட்’: தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படம் பெரிய வெற்றி பெற்று 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நடந்தது. இந்த விழாவில் யாரிப்பாளர்கள் ரவி, நவீன், பேசியதாவது:டியூட்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

பிரதீப் ரங்கநாதன், பேசும்போது “உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி” என்றார்.

Comments (0)
Add Comment