‘டோரதி’ பின்னணி இசை ஆல்பமாக வெளியீடு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தகவல்

பீட்சாட் , ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மகான், ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: நான் எப்போதுமே இளையராஜாவின் தீவிர ரசிகர். அவருடன் பணியாற்றிய நாட்கள் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள். என்னுடைய படத்தில் அவர் பணியாற்றியதில்லையே என்று கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசை அமைக்கிறார்.

‘டோரதி படத்தின் முதல் கட் காட்சிகளை இளையராஜாவிடம் காட்டிவிட்டு, அவர் என்ன சொல்வார் என்று ஆர்வத்துடன் அவரைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்தேன். சிறிய அமைதிக்கு பின்பு என்னைப் பார்த்து அவர், ‘நல்ல படம். நாளை காலையில் இருந்து வேலையைத் தொடங்கலாம்’ என்றார்.
என் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்ற உற்சாகத்தில் நான் மிதந்து கொண்டிருக்கும்போது, ‘படம் வெளியாவதற்கு முன்பு, படத்தின் பின்னணி இசையை ஓர் ஆல்பமாக நாம் வெளியிடலாம்’ என்று இளையராஜா சொன்னார். அப்போது என் மனம் ‘ரைட்டு அப்போ சம்பவம் கன்ஃபார்ம்’ என்று எண்ணிக் கொண்டது. ‘டோரதி’ படத்தின் ‘ஒரிஜினல் ட்ராக்’ டிஜிட்டல் முறையிலும், குறிப்பிட்ட அளவில் விநையல் ரெக்கார்டாகவும் வெளியாக இருக்கிறது. என்றார்.

.

Comments (0)
Add Comment