உழைத்தால் வெற்றி நிச்சயம்: ‘கஸ்தூரி வீடு’ விழாவில் சமுத்திரகனி பேச்சு

ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கஸ்தூரி வீடு. விஜய் ஆர். ஆனந்த் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சமுத்திரக்கனி பேசியதாவது:

ஒரு நல்ல பயணம் இது. விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம்.ஒவ்வொரு முறையும்ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்று நினைக்கிறவன் நான்.

புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும்.அப்படி ஒரு ஆசை இருக்கும்.

நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார். இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.

இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன்.அதுதான் நிஜம் .நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும். அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம்செய்வோம்; 100 சதவீதம் செய்வோம் .உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

என் குருநாதர் சொல்வார் “நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம். அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும்அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும் , அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.என்றார்

Comments (0)
Add Comment