லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை நடத்தியது.
இதனை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினி தொடங்கி வைத்தார். பின்பு இதுகுறித்து பேசிய சவுந்தர்யா “புற்று நோயில் வலி எனக்குத் தெரியும். உடலை விட மனதை அதிகம் வலிக்கச் செய்யும். எனது பாட்டிக்கு புற்று நோய் ஏற்பட்டு அழகான அவரது முடி உதிர்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். முடியிழப்பால் ஏற்படும் சிரமங்களை என்னால் உணர முடியும். அவர்களுக்கு உதவு வகையில் முடிதானம் செய்வது வரவேற்கத்தக்க ஒரு நற்செயல்.
சமூக வலைத்தளங்கள் மூலம் இதுபோன்ற நல்ல செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதிக அளவில் இதன் விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் பகிர வேண்டும். இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்கு என்னால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்குவேன்” என்றார்.