சிக்மா: புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்கால் சினிமா படித்தவர். அதை வைத்து தனது முதல் தேர்வாக அவர் எழுதியிருக்கும், இயக்கி இருக்கும் படம் சிக்மா. முதல் படத்திலேயே ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து ஏரியாவிலும் நின்று விளையாடி இருக்கிறார்.

படத்தின் நாயகன் சந்தீப் கிஷன்) தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்,

இந்த நிலையில் போதை மருந்து வியாபார கும்பல் ஒன்று இவரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. அந்த கும்பலின் வீடியோ ஆதாரங்கள். கும்பலின் தலைவன் மொத்த பணமும் இருக்கும் லாக்கரின் சாவி எல்லாமே சந்தீப்பிடம் சிக்குகிறது. தனது நண்பர்கள், காதலி ஆகியோருடன் இணைந்து அந்த கூட்டத்திற்கே தண்ணி காட்டி பணத்தை ஆட்டையப்போடுவதுதான் படத்தின் கதை.

ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் மூன்று ஏரியாவிலும் தனது பெஸ்டை கொடுத்திருக்கிறார் சந்தீப் கிஷன். அவரின் காதலியாக ஃபரியா அப்துல்லா உயரமாகவும், அழகாகவும் இருக்கிறார். . டாக்டராக ராஜு சுந்தரம் காமெடி செய்கிறார். அன்புதாசனின் கவிதை கணேஷ் கதாபாத்திரம் ஐடியா சூப்பர். சம்பத்ராஜ், ஷிவ் பண்டிட், மகாலட்சுமி, யோக் ஜேபி, கிரண் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

ஆக்ஷன் காட்சியில் கிருஷ்ணன் வசந்தனின் கேமராவில் அனல் பறக்கிறது. தமனின் இசையில் ‘சுலோச்சனா’ பாடல் தாளம் போட வைக்கிறது. அதேபோல, ஆக்ஷன் திரைக்கதைக்கு ஏற்ற மிரட்டலான பின்னணி இசையைச் சிறப்பாகவே வழங்கியிருக்கிறார்.

பணம் தேவை என்ற நிர்ப்பந்தத்திலிருக்கும் ஓர் இளைஞனுக்குக் கோடிக்கணக்கில் பணம் கைக்கு வரும் வாய்ப்பு வந்தால், அவனுடன் அதே எண்ணத்துடன் இருக்கும் இன்னும் சில நபர்களும் டீமாக இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஆக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

முதல் தேர்விலேயே பர்ஸ்ட் கிளாசில் பாசாகியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். வெல்கம் டூ தமிழ் சினிமா.

Comments (0)
Add Comment