பிரபல இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரித்துள்ள படம். பகத் பாசில் நாயகனாக நடித்துள்ள முதல் தெலுங்கு படம், முதல் பேண்டசி படம் என பல வகைகளில் இந்த படம் முக்கியமானதாகிறது. ஷசாங்க் ஏலேட்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பகத் பாசிலும் சிறுமி சாரா பலேகரும்தான் முக்கியமான கதாபாத்திரங்கள்.
பகத் பாசில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். பெட்டிங் கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதிக்கிறார். வில்லன் மகேஷ் மஞ்ரேக்கருக்கு பகத் 25 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். இதற்காக பகத் தவித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு மேஜிக் லாக்கெட் கிடைக்குது. அதுல இருந்து திவ்யா (பேபி சாரா) சிறுமி வருகிறார்..
அந்த சிறுமி பகத்திற்கு மட்டும்தான் தெரிவார். தன்னோட மேஜிக் பவரால் காணாம போன அப்பா அம்மாவை கண்டுபிடிச்சு தர சொல்லி சூரிகிட்ட அந்த சிறுமி கேட்கிறாள். ஆனால் சிறுமியின் மேஜிக்கை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார் பகத். அடுத்து என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
தீஹ்ஷிஷிரி
படத்தின் மேஜிக் விசுவல்ஸ் கலர் புல்லாக இருக்கிறது. பகத் பாசில் கடுமையாக உழைத்தும் இருக்கிறார், நடித்தும் இருக்கிறார். சிறுமி சாரா அழகாக இருக்கிறார், அற்புதமாக நடிக்கிறார். அவர்தான் படத்தின் உயிர். பகத் உடல்.
அஸ்லாமா வர்ற மகேஷ் மஞ்ச்ரேக்கர், போலீஸா வர்ற சுப்பராஜு, ஹீரோவோட ஃப்ரெண்டா வர்ற வெங்கடேஷ் ககுமானு எல்லாரும் அவங்க வேலையை கரெக்டா பண்ணியிருக்காங்க. டைரக்டர் ஷசாங்க் காமெடி, எமோஷன் ரெண்டையுமே ஆடியன்ஸுக்கு அழகாக கடத்தி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆடியன்சை அழ வைத்து விடுகிறது. விடுமுறைகால கொண்டாட்ட படமாக வந்திருக்கிறது.