பனிவிழும் மலர்வனம்: இயற்கையின் காதலர்களுக்கு…

இணையத்தின் வழியாக காதலனும், காதலனும் வீட்டு’கு தெரியாம் ஓடிச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டு கொடைக்கானலு’கு செல்கிறார்கள். அங்கு சில ரவுடிகளிடம் சிக்கிக் கொள்ளும் அவர்களை வர்ஷா காப்பாற்றி அங்கு அடைக்கலம் கொடுக்கிறார். அங்கு அவர்களுக்கு இன்னொரு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை அவர்கள் எதிர்கொண்டார்களா? பெற்றோருடன் சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

உண்மையான காதலர்களாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற அளவிற்கு அபிலாசும், சானிதாதாராவும் மாறி இருக்கிறார்கள். அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் கொஞ்ச நேர நடிப்புகூட இப்படிப்பட்ட அம்மாக்களின் பதற்றத்தை கண் முன்னே கொண்டு வந்துவிட்டது..
வர்ஷாவை இயல்பாக நடித்திருக்கிறார். கத்தியைக் காட்டி ரவுடிகளை மிரட்டுவதில் துவங்கி.. இவர்களை வீட்டில் வைத்து கவனிக்கவும் செய்யும் அந்த மென்மையையும் தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

கொடைக்கானலின் இயற்கைக் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். துப்பாக்கியே. இல்லாமல் புலி வேட்டைக்கு வந்திருக்கும் வனத்துறை மூலம் காலம்காலமாக காட்டுக்குள் இருந்தாலும் இது தொடர்பான முன்னெச்சரிக்கையே இல்லாமல் இருந்து வரும் அரசு அதிகாரிகளை பளீச்சென அடையாளப்படுத்தியிருக்கிறார் இயகுக்நர்.
காதலை நேசிப்பவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்குமான படம்.

Comments (0)
Add Comment