உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகும் ‘மைலோ’

செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.

முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

Comments (0)
Add Comment