புராணக் கதையான சத்தியவான் சாவித்திரியை அப்படியே திருப்பி போட்டால் இந்த படத்தின் கதை. அந்த கால சாவித்திரி கணவனை மீட்பதற்காக எமனிடமே சண்டை போட்டார். இந்தப் படத்தில் அதற்கு நெர் எதிரான ஒரு கதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்டு வழக்கறிஞரான மார்க்கண்டே எண் மாதிரி (மிஷ்கின்), தானும் பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் வலுக்கட்டாயமாக திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார். கணவர் வழக்கறிஞர் பணி செய்ய அனுமதிக்கிறார். மார்க்கண்டே எனக்கு உதவியாளராக சேரும் அவர் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராக வாதாடா வேண்டிய சூழ்நிலை உருவாகிறது அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.
இருவருக்கும் மோதல் வெடிக்கிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் கணவர் ஒருநாள் கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள… அந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக களம் இறங்குகிறார் மிஷ்கின் கணவனுக்காக களமிறங்குகிறார் கீர்த்தி சுரேஷ் இறுதியில் வெற்றி யாருக்கு என்பது படத்தின் கதை.
இது வணக்கம்மான கதையாக தோன்றினாலும் இதற்குப் பின்னால் இன்னொரு கதை இருக்கிறது அதுதான் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி. கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக மாறுவதற்கும் அன்பான மனைவியாகவும் மாறிய பிறகு அக்கினி குழம்பாகவும் வெ டித்திருக்கிறார். உன் பகுதியில் பாலசரவனுடன் இணைந்து காமெடி செய்யும் கீர்த்தி சுரேஷ் பின்பகுதியில் மிஸ்கினுடன் உக்கிரமாக மோதுகிறார்.
மிஸ்கினும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் முக பாவனையிலேயே அனைத்து உணர்வுகளையும் காட்டியிருக்கிறார்.
இரண்டாம் பாதி மற்றும் திருப்பங்கள். முதல் பாதியில் வைக்கப்பட்ட முடிச்சுகள் இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாக அவிழும் விதமும், கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது.
சாம் சி.எஸ். வழங்கியுள்ள பின்னணி இசை, நீதிமன்ற வாதங்களுக்கும் திருப்பங்களுக்கும் கூடுதல் விறுவிறுப்பைச் சேர்த்துள்ளது. ஒரு கோர்ட்டு டிராமாவுக்குள் பரபரப்பான கிரைன் டில்லரை சேர்த்து புதுமையான விறுவிறுப்பான படத்தை தந்து இருக்கிறார் இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய். இரண்டரை மணி நேர தரமான சினிமா.