2ம் உலகப்போர் பின்னணியில் உருவாகும் ‘டெத் ரெயில்வே’

2023ல் வெளிவந்த ‘யாத்திசை’ வரலாற்றுப் புனைவு ஆக்ஷன் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் அது. அந்த படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் தற்போது இயக்கி உள்ள படம் ‘டெத் ரெயில்வே’.

சசிகுமார், சமுத்திரகனி, கிஷோர், அசோ’ செல்வன், கவுரி, சேயோன், பவானி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சர்தக் கல்யாணி, ஏ.சி. சார்லஸ் ராஜ் இசை அமைத்துள்ளனர். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து தரணி ராசேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் பொழுது ஜப்பான் நாட்டு ராணுவம், பர்மா, நாகலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி முன்னேறியது. இந்த வரலாற்றை நேரடியாக படமாக்காமல் அந்த துயரத்தை பதிவு செய்ய விரும்பினேன் அதுதான் ‘டெத் இரயில்வே’. கதையை எழுதிவிட்டு தான் அதற்கான நடிகர்களை தேர்வு செய்தேன்.

சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்திலும் அதாவது நேதாஜியின் இந்திய தேச ராணுவ கமாண்டராகவும் , இந்திய சோல்ஜர்களின் தலைவராக சமுத்திரக்கனியும், அசோக் செல்வன் கேமியோ ரோலிலும் நடித்திருக்கின்றனர். சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு சசிகுமார், சமுத்திரக்கனி நேரடியாக சண்டை போடும் காட்சிகளும் உண்டு.

இந்த படத்தை பக்கா கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம். 1942-44 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த போரையும், போரால் எளியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இதில் பதிவு செய்திருக்கிறோம்.

படப்பிடிப்புக்கு நாகலாந்தில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால், நாகர்கோவிலில் செட் போட்டு 90% படமாக்கினோம். மீதி 10% சிஜி, க்ஷிதிஙீ பயன்படுத்தியிருக்கிறோம். பட வேலைகள் முடிய இன்னும் முழுமையாக ஒரு மாதம் ஆகும். அதன் பிறகுதான் வெளியீட்டு தேதி, புரோமோஷன் பணிகளை தொடங்க வேண்டும்” என்றார்.

Comments (0)
Add Comment