மர்ம தேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொடர்கள், அனந்தபுரத்து வீடு என்ற படம் மூலம் புகழ்பெற்ற நாகா இயக்கி உள்ள வெப் தொடர் ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ஜீ 5 தளத்தில் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
எல்லா கால கட்டத்துலேயும் நம்மை ஊக்கப்படுத்த வழிகாட்ட ஒருவர் வேண்டும். எனக்கு அப்படி நிறைய இயக்குனர்கள் கிடைத்தார்கள், அப்போது ஜனநாதன் சார், இப்போது நாகா சார். இந்த தொடரில் புராண கதையும் இருக்கிறது, நவீன விஞ்சான வளர்ச்சியான ஏஐ தொழில்நுட்பம் பற்றியும் இருக்கு. நிச்சயமாக இது எல்லோருக்கும் பிடித்த தொடராக இருக்கும். நீண்ட நாட்கள் நிறைய கஷ்டப்பட்டு உருவான தொடர் இது. எங்கள் உழைப்பு நிச்சயம் பேசப்படும். என்றார்.