காமெடியும், குணசித்ரமும் இணைந்து நடிக்க ஒரு சில நடிகர்களால்தான் முடியும். அந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, பிற்காலத்தில் நாகேஷ் அந்த வரிசையில் தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் கருணாகரன். பல காமெடி நடிகர்கள் களத்தில் இருந்தாலும் தனித்துவமான பாணியில் நடித்து வருகிறவர் கருணாகரன். இந்த ஆண்டு மட்டும் அவர் 7 படங்களில் நடித்துள்ளார்.
கருணாகரன் நடித்துள்ள ‘திரு.மாணிக்கம்’ அடுத்து வெளிவர உள்ளது. சூரியாவின் 44வது படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுதவிர 7 படங்கள் வரை கையில் வைத்திருக்கிறார். காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் இந்த காலத்தில் கருணாகரனும் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக வளர வாய்ப்பிருப்பதாக சினிமா பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.