மிஸ்டர். எக்ஸ்: தென்னகத்தின் ‘துரந்தர்’

ஹாலிவுட் ஸ்பை திரில்லர் படங்கள் எப்பவுமே ஸ்பெஷல். அது மாதிரியான முயற்சிகள் பாலிவுட்டிலும் நடந்தது. தமிழில் முதன்முறையாக முழுமையான ஒரு ஸ்பை திரில்லர் படமாக வெளிவந்திருக்கிறது ‘மிஸ்டர். எக்ஸ்’

பல வருடங்களுக்கு முன்பு அணு குண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை சோதனைக்காக இமயமலையில் உள்ள நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்கிறது இந்தியா. கொண்டு செல்லப்படும்போது ஏற்பட்ட பனிச்சரிவினால் தொலைந்து போய்விடுகிறது அந்த அணு மூலப் பொருட்கள்.

அது யார் கைகளுக்கும் போய்விடக் கூடாது என்பதற்காக, அதனைப் பாதுகாக்க ரா உளவாளியான பரமேஷ்வர் பிரதாபைச் (சரத்குமார்) நியமிக்கிறது இந்தியா.பல வருடங்கள் அதனை அவர் கண்காணித்து வந்த நிலையில் 2026ம் ஆண்டு அந்த அணு சாதனத்தை ரஷ்யா திருடிச் சென்று விடுகிறது. ரஷ்யாவிடமிருந்து அதனை மிஸ்டர் எக்ஸ் என்கிற மர்ம மனிதர் எடுத்துவிட முயல்கிறார்.

இந்த நிலையில் இந்த நிலைமையை சமாளிக்க கௌதம் கார்த்திக் தலைமையிலான ஸ்பை டீம் ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. அணு சாதனத்தை எடுத்துக்கொள்ள நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் யார்?. ஸ்பை டீம் அதை மீட்டதா என்பதுதான் படத்தின் கதை.

ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பரபர ‘துரந்தர்’ படத்தின் தெற்கத்தி வெர்ஷன் தான் மிஸ்டர்.எக்ஸ். மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இந்த ஸ்பை ஆக்ஷன் சினிமாவின் கதை. தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.

மிடுக்கான தோற்றம், முகத்தில் தெறிக்கும் நாட்டுப்பற்று, நாட்டுக்காகக் கடல் மலை தாண்டியோடும் வீரம் என ரா உளவாளியாக ஆக்ஷன் களத்தில் நின்று விளையாடி இருக்கிறார் ஆர்யா. எதிர்வரும் அத்தனை பிரச்சினைகளையும் அநாயசமாகக் கையாளும் வில்லனாக நடிப்பில் மாஸ் காட்டி பாஸ் மார்க் பெறுகிறார் கௌதம் ராம் கார்த்திக்.

ரா அமைப்பின் தலைமை அதிகாரியாக மஞ்சு வாரியர் நடிப்பில் ஹாலிவுட் தரம். இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்சன் காட்சிகளிலும் அடிபொளி. சரத்குமார், சீரியஸாக நடித்திருக்கிறார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், மோகன் ராம் ஆகியோர் அவரவர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், பின்னணி இசை படத்தின் வேகத்தை ராக்கெட்டாக மாற்றுகிறது.
‘ஹையோடி’ பாடல் முனு முனுக்க வைக்கிறது.

பாதுகாக்கப்படும் அணு சாதனம், அதனை அடைய நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் டீம், இவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் கௌதம் டீம் என இந்த ஸ்பை ஆக்ஷன் படத்தைக் ஹாலிவுட் தரத்தில் தந்திருக்கிறார் மனு ஆனந்த். இது தென்னகத்தின் ‘துரந்தர் ‘

Comments (0)
Add Comment